பிஎஸ்என்எல் விஆர்எஸ் 70,000 பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: பிஎஸ்என்எல் விஆர்எஸ் திட்டத்தில் ஓய்வு பெற 70,000 ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.பர்வார் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நஷ்டத்தில் தள்ளாடி வருகிறது. நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு, இந்த நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்கிடையில், வருவாயில் பெரும்பகுதி சம்பளத்துக்கே செல்வதால், சம்பள சுமையை குறைக்கும் வகையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.  கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 60,000 ஊழியர்கள் விஆர்எஸ் பெற விண்ணப்பித்துள்ளதாக தொலைத்தொடர்பு செயலாளர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த எண்ணிக்கை 70,000ஆக உயர்ந்துள்ளதாக பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.பர்வார் நேற்று கூறினார். இதன்மூலம் சுமார் 7,000 கோடி சம்பள பில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>