×

புரோ வாலிபால் பிப்.7ல் தொடக்கம்

மும்பை: புரோ வாலிபால் தொடரின் 2வது சீசன் பிப்.7ம் தேதி  தொடங்குகிறது. ஐபிஎல், புரோ கபடி போன்று கைப்பந்து விளையாட்டுக்காக புரோ வாலிபால் தொடர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அகமதாபாத் டிபண்டர்ஸ்,  பிளாக் ஹாக்ஸ் ஐதராபாத், காலிகட் ஹீரோஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், கொச்சி புளூ ஸ்பைகர்ஸ், யு மும்பா வாலி என 6 அணிகள் களமிறங்கின. முதல் சீசனில் சென்னை ஸ்பார்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிகள் கொச்சி, சென்னை நகரங்களில் நடந்தன. இந்நிலையில் புரோ வாலிபால் தொடரின் 2வது சீசன் பிப்.7ம் தேதி தொடங்கும் என்று இந்திய வாலிபால் கூட்டமைப்பும், பேஸ்லைன் வெஞ்ச்சர்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளன. லீக் மற்றும் தகுதிச் சுற்றில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடக்கும். இறுதிப் போட்டி மார்ச் 1ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.வாசுதேவன் கூறுகையில், ‘புரோ வாலிபால் தொடர் புதிய பாதையை காட்டியுள்ளது. நாட்டின் இளம் வீரர்களின் எண்ணங்கள் ஈடேறியிருப்பதுடன், உலகின் தலை சிறந்த வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது’ என்றார்.


Tags : Pro Volleyball , Pro Volleyball
× RELATED ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மோடிக்கு போரிஸ் அழைப்பு