லண்டன்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஜான் போர்க் பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரை வீழ்த்தினார். லண்டன் ஓ2 அரங்கில் நடைபெறும் இந்த தொடரில், ஆண்டு இறுதி உலக தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் களமிறங்கி உள்ளனர். ஒற்றையர் பிரில் ஜான் போர்க், ஆந்த்ரே அகாசி என இரு பிரிவுகளில் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஜான் போர்க் பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஜர் பெடரர் (3வது ரேங்க்), தனது முதல் லீக் ஆட்டத்தில் டொமினிக் தீமுடன் (5வது ரேங்க்) மோதினார்.