டாஸ்மாக் கடை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை

புழல்: சோழவரம் அடுத்த காரனோடை ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை - பெரியபாளையம் செல்லும் சாலை அருகில் 3 அரசு மதுபான கடைகள் உள்ளது. முதல் கடையில் பெரியபாளையம் ஆரணி சேர்ந்த சந்திரசேகர் (42). சூபர்வைசராக உள்ளார். இவர் நேற்று மதியம் 12 மணிக்கு கடை திறக்க வந்தார். அப்போது கடையில் ஐந்து பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் உடைந்து கிடந்தது. மேலும் கல்லாவில் இருந்த சுமார் 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் 7 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>