மேலவளவு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலையை எதிர்த்து முறையீடு

மதுரை: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர், பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் முறையிடப்பட்டது.  எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதில், மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகளான ராமர் உள்பட 13 பேர், கடந்த 9ம் தேதி மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் அமர்வில் வக்கீல் ரத்தினம் ஆஜராகி, ‘‘மேலவளவு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவசர வழக்காக இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’’ என்றார்.  அப்போது நீதிபதிகள், ‘‘நீங்கள் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’’ என்றனர். இதையடுத்து மனுவாக தாக்கல் செய்ய வக்கீல் ரத்தினம் உள்ளிட்ட சில வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>