1 மாத பரோலுக்காக புழலில் இருந்து பேரறிவாளன் இன்று வேலூர் சிறைக்கு மாற்றம்

வேலூர்:  ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் இருந்து கடந்த ஆண்டு சிகிச்சைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தை குயில்தாசனுடன் இருக்கவும், சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும்  பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள் சிறைத்துறையிடம் மனு அளித்தார்.

Advertising
Advertising

இதையடுத்து தமிழக அரசு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. தொடர்ந்து சென்னை புழல் சிறையில் உள்ள பேரறிவாளன் இன்று வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஒரு மாதம் பரோலுக்கு ஜோலார்பேட்டை வீட்டிற்கு அழைத்து செல்லப்பட உள்ளார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் அறுவை சிகிச்சை மற்றும் அக்காள் மகளின் திருமணத்திற்கு சென்று வருவதற்காக 2 நாட்கள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: