மறைந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல் தகனம்: மு.க.ஸ்டாலின், தலைவர்கள் அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் கமலஹாசன் மற்றும் முன்னாள் மாநில தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக தேர்தல் அதிகாரி  சத்யப் பிரதா சாகு, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், பொதுமக்கள் நேரில் சென்று சேஷன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.மறைந்த டி.என்.சேஷன் உடல் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை, பெசன்ட்நகர் மின்மியானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Related Stories: