×

பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தர்மபுரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதுபோல, சென்னை தெற்கு-பொருளாளர் துரைமுருகன் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., மங்கலம் பிரபாகரன். காஞ்சிபுரம் தெற்கு-கனிமொழி, எம்.பி., பொன்னேரி சிவா. காஞ்சிபுரம் வடக்கு- அ.ரகுமான்கான், சென்னை மேற்கு-கம்பம் செல்வேந்திரன், திருவள்ளூர் வடக்கு-புலவர் இந்திரகுமாரி, வேங்கை சந்திரசேகர். திருவள்ளூர் தெற்கு-கந்திலி கரிகாலன்,  கவிஞர் தமிழ்தாசன்.

சென்னை வடக்கு- கரூர் முரளி, சென்னை கிழக்கு- சபாபதிமோகன், பவித்திரம் கண்ணன், திருச்சி தெற்கு -உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.  இதேபோல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் பங்கேற்போர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா எம்பி, ஆ.ராசா, தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இத் தகவல்களை தெரிவித்துள்ளனர்.


Tags : MK Stalin ,DMK ,announcement ,Dharmapuri ,MK Stalin's Division , General committee , MK Stalin,Dharmapuri,DMK announcement
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்