பிஎஸ்என்எல்.க்கு மேற்குவங்க அரசு 46 கோடி கடன் பாக்கி: முதல்வர் தலையிட கோரி கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 46 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளது. இதில் தலையிட்டு நிலுவைத் தொகையை விரைந்து வழங்கும்படி இம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய  அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், பல ஆயிரம் கோடி கடன் சுமையால் சிக்கி தவிக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் அளிக்க முடியாமல் திணறுகிறது.  இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பெங்கால் சர்க்கிள் மேலாளர் ராமகாந்த் சர்மா வெளியிட்ட அறிக்கையில், `மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு அரசு துறைகள் பிஎஸ்என்எல்.க்கு செலுத்த வேண்டிய மொத்த கடன் 46 கோடியாக உள்ளது.  நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், இதனை விரைந்து செலுத்தும்படி உள்துறை செயலருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

Advertising
Advertising

பிஎஸ்என்எல். நிறுவனம் கடந்த 3 மாதங்களாக மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை கடன் சுமையால் முழுவதுமாக கட்ட முடியவில்லை. இதனால் நிறுவனத்தின் மின் கட்டண பாக்கி 17 கோடியாக உள்ளது.  இத்தொகையானது, வரும் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர், 4 தவணைகளாக செலுத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.  பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பல்வேறு மாநில அரசுகள் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் இருப்பதால்தான், இந்நிறுவனம் கடன் சுமையில் சிக்கியுள்ளது. எனவே, அம்மாநில முதல்வர்கள் தலையிட்டு நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக,  இந்நிறுவனத்தின்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: