ஹரித்துவார் தகர்க்கப்படும் என உத்தரகாண்ட் முதல்வருக்கு செல்போனில் மிரட்டல்

டேராடூன்:  ஹரித்துவாரில் உள்ள ஹர் கி பைரி படித்துறை வெடி வைத்து தகர்க்கப்படும் என முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு மர்மநபர் மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கடந்த 9ம் தேதி 3.30 மணிக்கு ஒரு ெசல்போன் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பை முதல்வரின் பிரத்யேக அதிகாரி அனந்த் சிங் ராவத் ஏற்று பேசியுள்ளார். செல்போனில் பேசிய நபர்  ஹரித்துவாரில் உள்ள ஹர் கி பைரி படித்துறை பகுதி வெடிவைத்து தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும் ஹர் கி பைரி படித்துறை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பேருந்து  நிலையப்பகுதிகளில் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். ஹர் கி பைரி படித்துறை மட்டுமின்றி இதர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>