நாடாளுமன்ற நிதிநிலை குழுவுக்கு மன்மோகன் தேர்வு: மாநிலங்களவை அறிக்கை தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் நிதிநிலை குழுவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், கடந்த 1991-96ம் ஆண்டுகளில் மத்திய நிதியமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2014 செப்டம்பர் முதல் 2019 மே வரை நாடாளுமன்ற நிலைக்  குழுவில் இடம் பெற்றிருந்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஆகஸ்ட் மாதம் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், மாநிலங்களவை வெளியிட்ட அறிக்கையில், `மன்மோகன் சிங் நாடாளுமன்ற நிதிநிலை குழுவுக்கு மாநிலங்களவைத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, நிதிநிலை குழுவில் இடம் பெற்றிருந்த மாநிலங்களவை  உறுப்பினர் திக்விஜய் சிங் நகர மேம்பாட்டு குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.முன்னதாக, நிதிநிலை குழுவில் மன்மோன் சிங் இடம் பெற வேண்டி திக்விஜய் சிங் அக்குழுவில் இருந்து பதவியை ராஜினாமா செய்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>