50 லட்சம் நஷ்டம் குடும்பத்துடன் வியாபாரி தற்கொலை

விருதுநகர்: விருதுநகர், ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் இன்பமூர்த்தி (69). மல்லி வியாபாரி. இவர், மனைவி திலகவதி (62), மகன் கண்ணன் (40), மருமகள் காயத்ரி (32), பேத்தி தனுஷா (8) ஆகியோருடன்  வசித்து வந்தார். பெரியவள்ளிகுளம் கிராமத்தில் மல்லி கிட்டங்கி உள்ளது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தனியாவை மொத்தமாக வாங்கி, இருப்பு வைத்து கலர் ஏற்றி விற்பனை செய்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் வியாபாரத்தை கவனிக்கும் பொறுப்பை மகன் கண்ணனிடம் ஒப்படைத்தார். குஜராத் மாநிலத்தில் மல்லி வாங்கியதற்காக கண்ணன் கொடுத்த காசோலைகள்  பணமின்றி திரும்பியதை தொடர்ந்து, குஜராத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் கண்ணன் ஆஜராகி வந்தார்.

இந்நிலையில், மல்லி கிட்டங்கியில் இன்பமூர்த்தி, கண்ணன் ஆகியோர் நேற்று இறந்துகிடந்தனர். உயிருக்கு போராடிய திலகவதி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இன்பமூர்த்தி எழுதிய கடிதத்தில் மகன் கண்ணனை. அல்லம்பட்டியைச் சேர்ந்த புரோக்கர் மாணிக்கவேல் (37), ஏமாற்றி 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளார் என எழுதியிருந்தார். மாணிக்கவேலின் மனைவி சொர்ணலதா, பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: