1 லட்சம் கள்ளநோட்டுடன் இலங்கை வாலிபர் கைது

மண்டபம்: இலங்கை தலைமன்னாரை சேர்ந்தவர் அருண் (24). திருப்பூர் மாவட்டம், அவினாசி அகதிகள் முகாமில் தங்கியுள்ளார். இவர் நேற்று ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள உறவினரை சந்திக்க வந்தார். பின்னர் மண்டபம் அருகே மயான பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்தார். தகவலறிந்து கியூ பிரிவு போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடமிருந்த 1 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அருணை கைது செய்த கியூ பிரிவு போலீசார், விசாரணைக்காக ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: