×

ஆட்சி அமைக்க ஆளுநரிடம் மேலும் 1 நாள் அவகாசம் கேட்டனர் சிவசேனா தலைவர்கள், ஆனால் மறுத்துவிட்டார்: உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரியிடம் மேலும் 1 நாள் அவகாசம் கேட்டனர் சிவசேனா தலைவர்கள். ஆனால் ஆளுநர் கோஷ்யாரி தங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க விருப்பம் தெரிவித்துள்ளோம். மராட்டிய ஆளுநரை சந்தித்த பின்னர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே செய்தியாளர் சந்தித்து பேசினார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்ந்து நாங்கள் பேசி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களைப் பெற்ற பாஜகவை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் பாஜக தலைவர்களோ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் ஆட்சி அமைக்க முடியாது என ஆளுநரிடம் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து 2-வது தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், சிவசேனா எம்.எல்.ஏ-வும் ஆன ஆதித்யா தாக்கரே மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தனர். அத்துடன் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிலரும் வந்திருந்தனர்.

அவர்கள் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அனுமதிக்குமாறு உரிமை கோரினர். இந்த சந்திப்பு முடிந்தவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே செய்தியாளர் சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது;  கூட்டணி ஆட்சி தொடர்பாக மேலும் இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆட்சியமைக்க ஆளுநரிடம் 24 மணி நேரம் அவகாசம் கேட்டிருக்கிறோம், ஆனால் ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்க மறுத்துவிட்டார். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.


Tags : leaders ,Aditya Thackeray ,governor ,Shiv Sena ,Uttav Thackeray , Reigns, Shiv Sena, Uddhav Thackeray, Aditya Thackeray
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...