விடுதலை புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது டெல்லி தீர்ப்பாயம்!!!

டெல்லி: விடுதலை புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு டெல்லி தீர்ப்பாயம்  நீட்டித்தது. விடுதலை புலிகள் மீதான தடையை கடந்த 2014-ம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு நீதிமன்றம் நீட்டித்திருந்தது. இந்நிலையில்  விடுதலை புலிகள் மீதான தடை முடிந்ததை அடுத்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு தற்கொலைபடையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியா முழுவதும் தடைவிதித்து, அதனை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த தடை கடந்த மே 13ம் தேதி முதல் முடிவுக்கு வந்தது. இந்தநிலையில் 2024ம் ஆண்டு மே மாதம் வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான் தடையை நீடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? அதற்கான காரணங்கள் ஏதும் உள்ளதா என்பதை தீர்மானிக்க ஒரு தீர்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் சட்ட விரோத தடுப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த அமைப்பு விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்து ஆராய்ந்து வந்தது. இந்நிலையில் இந்த அமைப்பு விடுதலை புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

Related Stories: