70 மீட்டர் நகர்ந்த லைட் ஹவுஸ்!

டென்மார்க்கின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று ரப்ஜேர்க் நூட் கலங்கரை விளக்கம். வருடத்துக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் இது. 120 வருடங்களாக வீற்றிருக்கும் இந்தக் கலங்கரை விளக்கம்தான் இணையத்தில் ஹாட் டாக்.

ஆம்; மண் அரிப்பு காரணமாக கடலில் விழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது ரப்ஜேர்க் நூட்.நாட்டின் பொக்கிஷமாகக் கருதப்படுகிற ஒன்றை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அழகான ஒரு திட்டத்தை 18 மாதங்களுக்கு முன்பு தீட்டியது டென்மார்க் அரசு.  கலங்கரை விளக்கத்தை துளி சேதமில்லாமல் அப்படியே பெயர்த்து பாதுகாப்பான இடத்தில் வைப்பதுதான் அந்தத் திட்டம்.

இதற்காக தண்டவாளம் அமைத்து, முக்கிய கட்டட பொறியாளர்களிடம் ஆலோசனை நடத்தி கோடிக் கணக்கில் பணத்தையும் ஒதுக்கியது அரசு.

794 டன் எடையுள்ள கலங்கரை விளக்கத்தை மணிக்கு 8 மீட்டர் வேகத்தில் 70 மீட்டர் தூரம் நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டனர். இந்த ஆச்சர்ய சம்பவத்தை சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்தனர்

த.சக்திவேல்

Related Stories: