×

ஏழை நோயாளிகளின் மருத்துவ செலவுக்கு ரூ.50,000 வழங்குக... : பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் பலி

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி  அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மகன் திருமணம் நடந்தது. இதற்காக வரும் துணை முதல்வர் உள்ளிட்டோரை வரவேற்பதற்காக சாலையின் நடுவே அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது ஒரு பேனர் விழுந்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி மோதியதில். இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.  

அதிமுக பிரமுகர் ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் கைது


இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போலீசாரும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் தனித்தனியாக இரு வழக்குகளை பதிவு செய்தனர். பின்னர், ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஜாமீன் கோரிய அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இருவருக்கும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நிபந்தனைகள்...

*ஏழை நோயாளிகளின் மருத்துவ செலவுக்கு ரூ.50,000 வழங்க வேண்டும்
*மதுரையில் தங்கி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்
*மருத்துவமனைக்கு வழங்க வேண்டிய தொகையான ரூ.50,000 ஐ அடையாறு கேன்சர் மருத்துவமனை மற்றும் *ஸ்டான்லி மருத்துவமனைக்கு தலா ரூ.25,000 ஆக பிரித்து தர வேண்டும்.
*மேகநாதனனுக்கு தினமும் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை பரிசீலனையில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்தது.


Tags : Jayakopal ,AIADMK , Conditions, AIADMK, banner, cupasri, AIADMK, Jaigopal, Meganathan, arrest, bail
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...