ஆட்சியை பிடிக்குமா சிவசேனா? : மராட்டியத்தில் புதிய அரசு அமைப்பது குறித்து சரத்பவாரை சந்தித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை

மும்பை : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே மும்பையில் சந்தித்துள்ளார். சிவசேனாவுக்கு ஆதரவு குறித்து காங்கிரஸ், தேசிவாத காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட தாமதமாகும் நிலையில் இந்த சந்திப்பு நடக்கிறது. முன்னதாக காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும் என சரத் பவார் தெரிவித்திருந்தார்.இதனிடையே சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாததால் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என அவர் தெரிவித்தார்.

மகாராஷ்திராவில் என்ன தான் நடக்கிறது...

*மகாராஷ்திராவில் சிவசேனா முன்வைத்த கோரிக்கைகளை கூட்டணி கட்சியான பாஜக ஏற்க மறுத்ததால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

*இதையடுத்து தனக்கு போதிய பெரும்பாண்மை இல்லை என்றும் ஆட்சியமைக்க முடியாது என்றும் ஆளுநரிடம் பாஜக தெரிவித்தது.

*அதைத் தொடர்ந்து சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது.

*இந்த நிலையில் டெல்லியில் மகாராஷ்திரா நிலவரம் தொடர்பாக டெல்லியில் தற்காலிக தலைவர் சோனியா தலைமையில் செயற்குழு கூடி ஆலோசனை நடத்தியது. அதில் சிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு தர முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இன்று மாலை மீண்டும் கூடி முடிவு பற்றி இறுதி ஆலோசனை நடைபெற உள்ளது.

*இதனிடையே மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

*மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது, சிவசேனா.எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சிவசேனா மூத்த தலைவர்கள் கொடுக்கிறார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதல் கால அவகாசம் கோரவும் சிவசேனா திட்டமிட்டுள்ளது. இதனிடையே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: