சிவகங்கை அருகே பரிகார பூஜைக்கு கூடுதல் பணம் தராத மூதாட்டியை கொன்ற சாமியார்: கழுத்தை நெரித்ததால் கணவர் உயிர் ஊசல்

சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூர் பிள்ளையார்கோவில் பின்புறம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் ஆதப்பன் (82). இவரது மனைவி மீனாட்சி (78). இவர்களது மகன் தஞ்சையில் வசிக்கிறார். முதியோர் இருவரும் தனியே வசித்து  வந்தனர்.நேற்று அதிகாலை பால் ஊற்ற வந்த பெண் வீடு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்தார். அங்கு மீனாட்சி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ஆதப்பன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக ஆதப்பனை மீட்டு சிவகங்கை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கூறுகையில், ‘‘ஆதப்பன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால், கணவன், மனைவி இருவரும் சிவகங்கை  செந்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் சென்றனர். அவர் பரிகார பூஜை செய்து வேல் ஒன்றை கொடுத்தார். பரிகாரத்திற்கு ரூ.30 ஆயிரம் வரை சாமியார் பெற்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சாமியார் உள்பட 2 பேர்  வீட்டிற்கு வந்து, பரிகாரம் செய்ததற்கு மேலும் பணம் கேட்டுள்ளனர். இதற்கு மீனாட்சியும், ஆதப்பனும் மறுக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மீனாட்சியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, 10 பவுன் செயின், தோடு  உள்ளிட்டவற்றை பறித்தனர். ஆதப்பனின் கழுத்தையும் நெரித்து அவரிடம் வீட்டில் உள்ள நகைகள் குறித்து விசாரித்தனர். அவர் மயங்கிவிட்டதால் அப்படிேய விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். குற்றவாளிகளை தேடி வருகிறோம்’’  என்றனர்.

Related Stories:

>