தொடர் சோதனை மூலம் 1.35 கோடி தங்கம் சிக்கியது

* 3 பேர் கைது* விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 1.35 கோடி  மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.துபாயிலிருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.20 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அமீர் தெக்குல்லாகண்டி (41), ஹாரூண் நகார் மொயாத் (29) ஆகிய  இருவரும் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று விட்டு திரும்பி வந்தனர். சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் நடத்திய சோதனையில் பேன் பெல்ட் பகுதியில் தங்கத்தகடுகள் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இருவருடமிருந்தும் 1.82 கிலோ தங்கத்தை கைப்பற்றினர்.

அதன் சர்வதேச மதிப்பு 71.5  லட்சம் சுங்க அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை  பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ஜாவீத் முஷார் (22) என்பவரிடம் நடத்திய சோதனையில் அவரது சூட்கேசில் சிறிய சிறிய  பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள் இருந்தது. அதில் 26.5 கிலோ மதிப்புள்ள குங்குமப் பூக்கள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 63.5 லட்சம். சுங்க அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து ஜாவித் முஷாரை கைது செய்தனர்.

Related Stories: