மியூச்சுவல் பண்ட் முதலீடு திடீர் சரிவு

புதுடெல்லி: மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு கடந்த அக்டோபரில் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் குறைந்த நிலையில், சிலர் மியூச்சுவல் பண்ட்களிலும் ஆர்வம் காட்ட தொடங்கினர். கடந்த அக்டோபர் மாதத்தில் பங்குச்சந்தையுடன் தொடர்புடைய மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ6,026 கோடி. இதில் மாத இறுதியில் ரூ11 கோடி வெளியேற்றப்பட்டது. இதன்படி நிகர முதலீடு ரூ6,015 கோடி.

கடந்த மே மாதத்துக்கு பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது குறைந்துள்ளது என இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னதாக  இந்த முதலீடு ஜூன் மாதத்தில் ரூ7,585 கோடி, ஜூலையில் ரூ8,092 கோடி, ஆகஸ்ட்டில் ரூ9,090 கோடி என அதிகரித்து வந்தது.  செப்டம்பரில் ரூ6,489 கோடியாக குறைந்தது.

Related Stories: