×

சில்லி பாயின்ட்...

* வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, லக்னோவில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. முதல் 2 போட்டியிலும் அபாரமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன.
* சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழகம் - உத்தரப்பிரதேசம் மோதுகின்றன. இப்போட்டி காலை 9.30க்கு தொடங்குகிறது.

* ஆஸ்திரேலியா ஏ - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் பயிற்சி ஆட்டம் (3 நாள்) பெர்த் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
* வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியுடன் நடந்த முதல் டி20 போட்டியில், இந்தியா 84 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன் (ஷபாலி வர்மா 73, ஸ்மிரிதி மந்தனா 67, ஹர்மான்பிரீத் கவுர் 21*, வேதா 15*). வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன். இந்திய அணி தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா (15 வயது, 285 நாள்), சர்வதேச போட்டியில் மிக இளம் வயதில் அரை சதம் அடித்த இந்தியர் என்ற வகையில் சச்சினின் சாதனையை (16 வயது, 214 நாள்) முறியடித்தார்.

Tags : Chili Point ...
× RELATED சில்லி பாயின்ட்...