சில்லி பாயின்ட்...

* தோஹாவில் நடைபெற்று வரும் 14வது ஆசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தார். துப்பாக்கிசுடுதலில் இந்திய அணி இதுவரை 12 ஒலிம்பிக் கோட்டா இடங்களை வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை உலகின் நம்பர் 1 ஜோடியான இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி ஜிடியோன் - கெவின் சஞ்ஜயா சுகமுல்ஜோ இணையிடம் 16-21, 20-22 என்ற நேர் செட்களில் தோற்று வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. இந்த ஆண்டு 3வது முறையாக மார்கஸ் - கெவின் ஜோடியிடம் சாத்விக் - சிராக் தோற்றுள்ளனர்.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது யார் என்பதை தீர்மானிப்பதற்காக நட்சத்திர வீராங்கனை மேரி கோம் - நிகாத் ஜரீன் மோதும் குத்துச்சண்டை போட்டி (51 கிலோ எடை பிரிவு) அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: