1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர 1 லட்சம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரத்து குறைவு காரணமாக, வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதமாக கடுமையாக உயர்ந்துள்ளது. விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய நுகர்வோர் அமைச்சக அதிகாரிகள் கூட்டம் நேற்று நடந்தது.

இதில், வெளிநாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இறக்குமதியாகும் வெங்காயம் உள்ளூர் சந்தையில் வரும் 15ம் தேதி முதல் டிசம்பர் 15க்குள் சப்ளை செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: