பவர்புல் இன்ஜினுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500

சக்தி வாய்ந்த புதிய டீசல் இன்ஜினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மத்திய அரசு சார்பில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதற்காக, அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரான இன்ஜின்களுடன் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் எஸ்யூவி ரக கார் ஸ்பெஷலிஸ்ட்டான மஹிந்திரா நிறுவனமும் பிஎஸ்-6 மாடல்களை அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகி வருகிறது.

மேலும், தனது ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மாடல்களில் புத்தம் புதிய டீசல் இன்ஜினை பயன்படுத்த இருக்கிறது மஹிந்திரா. அந்த வகையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி500 கார் பற்றிய படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இப்புதிய காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 155 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன்கொண்டது. ஆனால், பிஎஸ்-6 மாடலில் இடம்பெற இருக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 185 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், பிஎஸ்-6 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது.

இது தவிர்த்து, மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் சோதனை செய்து வருகிறது. இந்த இன்ஜின் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 மாடல்களில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான இன்ஜின்களுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 கடந்த சில மாதங்களாக, சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மாற்றம் செய்து மேம்படுத்தப்படுகிறது. புதிய மாற்றங்கள், பிஎஸ்-6 இன்ஜின்களுடன் விலையும் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர், ஜீப் காம்பஸ், ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் இப்புதிய கார் போட்டி போடும். இது, 7 சீட்டர் மாடலாக இருப்பது பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது.

Related Stories:

>