யமஹா ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து

இளைஞர்களை கவருகிற வகையிலான தோற்றமுடைய பைக்குகளை அறிமுகம் செய்வதில் யமஹா நிறுவனம் அசாத்திய திறன் கொண்டது. இந்நிலையில், புதிய துடிப்பான அப்டேட்டுடன் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக யமஹா அறிவித்துள்ளது. பல்வேறு காஸ்மெட்டிக் மாற்றங்கள் இப்புதிய பேஸ்லிப்ட் ஆர் 3 மாடலில் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, பைக்கின் புதிய தோற்றத்திற்காக மாற்றியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப், பாக்ஸ் ஏர் இன்டேக் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இது, பார்ப்பதற்கு ஆர் 1 மாடலில் இடம்பெற்றிருக்கும் வசதியை போன்று காட்சியளிக்கிறது. அதேசமயம், இந்த அமைப்பு மட்டுமின்றி வின்ட்ஷீல்ட், பியூவல் டேங்க் பகுதி, பின்பக்கத்தின் ஷார்ப்பான பகுதி உள்ளிட்டவை ஆர் 1 பைக்கை தழுவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன், நவீன தொழில்நுட்ப வசதியாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது, ரைடருக்கு தேவையான, நேரம், இன்ஜின் ஹீட், பெட்ரோல் அளவு உள்ளிட்ட பல தகவல்களை வழங்கும். இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் இன்ஜின் 321 சிசி திறனை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது.

இது, அதிகபட்சமாக 41 பிஎச்பி பவர் மற்றும் 29.6 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் காணப்படும் இதன் இன்ஜின் பிஎஸ்-6 தரத்தில் ஆனது. மேலும், யமஹா ஆர்3 பைக்கில் சொகுசான ரைடிங் அனுபவத்திற்காக கேஒய்பி யுஎஸ்டி போர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளது. கிளிப்-ஆன் ஹேண்டில்பார்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக், விழாக்காலத்தைெயாட்டி வரும் டிசம்பர் 19ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆகையால், யமஹா ரசிகர்களுக்கான இது கிறிஸ்துமஸ் விருந்தாக அமைய இருக்கிறது.

Related Stories: