தர்மபுரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை; அயோத்தி தீர்ப்பு; கிருஷ்ணகிரியில் விடுமுறை

தர்மபுரி: தர்மபுரியில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தம் புயலாக மாறி தற்போது மேற்குவங்க பகுதிக்கு நகர்ந்து சென்றுள்ளது.

அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்ப சலனம் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில நாட்களாக கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தர்மபுரியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு விவரத்தை வெளியிடுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: