×

காதல் கணவருடன் சேர்ந்து பலாத்காரம்: கோவையை சேர்ந்த இளம்பெண் நெல்லையில் கொன்று புதைப்பு? மிரட்டல் வழக்கில் கைதானவர்கள் ‘திடுக்’ தகவல்

நெல்லை:  நெல்லை  டவுன் லாலுகாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராம்.  இவர் கடந்த 5ம் தேதி நெல்லை டவுன் தொண்டர்  சன்னதி அருகில் தனது நண்பருடன் நடந்து  சென்றார். அப்போது செபஸ்தியார்  கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்,  ராமையன்பட்டியை சேர்ந்த ஆசீர்செல்வம்  ஆகியோர் ஜெயராமை வழிமறித்து அவதூறாக  பேசி கத்தியை காட்டி கொலைமிரட்டல்  விடுத்தனர். இதுதொடர்பாக ஜெயராம், நெல்லை டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்  வழக்கு பதிந்து மணிகண்டன் (26),  ஆசீர்செல்வம் (38) இருவரையும் கைது  செய்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவலை கூறினர். இதுகுறித்த விவரம் வருமாறு: கடந்த 2012ம் ஆண்டு இவர்களின் நண்பர் ஒருவர் கோவையில் வேலை பார்த்துள்ளார். அவர்  அந்த பகுதி இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து  நெல்லைக்கு அழைத்து வந்தாராம்.

இங்கு காதல் மனைவியுடன் வாழ்க்கை  நடத்தியுள்ளார். சிறிது நாட்களில் காதல் தம்பதிக்குள் கருத்து மோதல்கள்  உருவானது. இதனால் அந்த இளம்பெண்ணை காதல் கணவரே நண்பர்களுக்கு  விருந்தளிக்க சம்மதித்தார். அதன்படி மணிகண்டன், ஆசீர்செல்வம் மற்றும் இளம்பெண்ணின் காதல் கணவர் என மூவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.  அப்போது அந்த பெண் மூர்ச்சையாகி இறந்து விட்டாராம். இதையடுத்து அந்த  பெண்ணின் உடலை நெல்லை தச்சநல்லூர் குருநாதன் கோயில் பகுதியில், குழி தோண்டி  புதைத்து விட்டனர். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோவையை சேர்ந்த இளம்பெண்ணை காதல்  திருமணம் செய்த  வாலிபர் யார், கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின்  பெயர், குடும்ப  விவரங்கள் குறித்து பிடிபட்ட இருவரிடமும் விசாரணை  நடத்திவிட்டு, கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை தப்பிய காதலன்
இதற்கிடையே கொலை சம்பவத்திற்கு பிறகு இளம்பெண்ணை  காதல் திருமணம் செய்து அழைத்துவந்த வாலிபர் ஊரில் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் மும்பை தப்பி ஓடி விட்டார். தற்போது அவர் மும்பையில் வேலை செய்து  வருவதாக தெரியவந்துள்ளது. அவரை கைது செய்யவும் போலீசார் முயற்சி  மேற்கொண்டுள்ளனர். அவர் சிக்கிய பின்னர் தான் நடந்த  சம்பவங்கள் குறித்த முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : teenager ,Detainees ,Kovai , Romantic husband, rape, kovai, teenager paddy, bully
× RELATED காதல் திருமணம் ஒரு மாதத்திலேயே...