நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு: மாணவர்களின் பெற்றோருக்கு நவ.22 வரை காவல் நீட்டிப்பு

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு, நீதிமன்ற காவலை நவ.22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.   மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார், மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை கைது செய்தனர். இவர்களைத் தொடர்ந்து மாணவர்கள் பிரவீன், ராகுல், இவர்களின் தந்தைகளான சரவணன், டேவிட், மாணவர் இர்பான், அவரது தந்தை முகமது சபி, மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றக்காவலில் இருந்து வரும் சரவணன், டேவிட், முகமது சபி, மைனாவதி ஆகியோரின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இவர்கள் நால்வரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம் 4 பேருக்கும்,  நவ.22ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

மீண்டும் மனுவால் அபராதம்

நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கில் கைதான மருத்துவ மாணவன் ராகுலின் தந்தை ேடவிட், தனக்கு ஜாமீன் கோரி மீண்டும் மனு செய்தார். இந்த மனு நீதிபதி வீ.பார்த்திபன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘இவரது ஜாமீன் மனு கடந்த அக். 30ம் தேதி தள்ளுபடியானது. உடனடியாக மீண்டும் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். இது ஏற்புடையதல்ல. அதே நேரம் விசாரணைக்கு மனுதாரர் தரப்பில் எந்தவித ஒத்துழைப்பும் இல்லை’’ என்றார். இதையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ‘‘உடனடியாக மீண்டும் மனு செய்ததால் ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்காக செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: