கல்வி உதவித்தொகை பெற காலநீட்டிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய புத்த பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ மாணவியர்களிடமிருந்து 2019-20ம் ஆண்டிற்கான பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 15.11.2019 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: