முக்கால் சதவீதம் வரை டெபாசிட் வட்டியை குறைத்தது எஸ்பிஐ

புதுடெல்லி:   பாரத ஸ்டேட் வங்கி, எம்சிஎல்ஆர் விகிதத்தை அனைத்து கடன்களுக்கும் 5 அடிப்படை புள்ளிகளும், டெபாசிட்களுக்கான வட்டியை 0.15 சதவீதம் முதல் முக்கால் சதவீதம் வரையிலும் குறைத்து அறிவித்துள்ளது. இது வரும் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த வங்கி இத்துடன் சேர்த்து 7வது முறையாக வட்டியை குறைத்துள்ளது.

இந்த வங்கியின் பெரும்பாலான கடன்கள் எம்சிஎல்ஆர் முறையில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த கடன்களுக்கான வட்டி 8 சதவீதமாக குறையும் என இந்த வங்கி தெரிவித்துள்ளது. டெபாசிட் வட்டியை பொறுத்தவரை, ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்கு கீழ் உள்ள டெபாசிட்களுக்கு வட்டியை 0.15 சதவீதமும், மொத்த டெபாசிட்களுக்கான வட்டியை 0.3 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரையிலும் குறைத்துள்ளது. இதனால் டெபாசிட் வட்டி வருவாயை நம்பி இருப்பவர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கும்.

Related Stories: