பொருளாதார மந்த நிலையால் இந்தியாவுக்கான தர மதிப்பீடு குறைப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கான தர மதிப்பீட்டை மூடீஸ் நிறுவனம் அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளது. இந்திய பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் உள்ளது. ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பல்வேறு மதிப்பீட்டு நிறுவனங்களும் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. இதை அடுத்து மத்திய அரசு வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நிதி சீர்த்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தது. இந்த நிலையில், மூடீஸ் நிறுவனம் இந்தியாவுக்கான தர குறியீட்டை வௌியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்த நிலை, எதிர்பார்த்ததை விட மிகவும் பின்னடைவாக காணப்படுகிறது. மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது. ஆனால், வரி குறைப்பு போன்றவற்றால் இது 3.7 சதவீதமாக இருக்கும் என மூடீஸ் தெரிவித்துள்ளது.

சில்லரை வர்த்தகங்கள், கார் உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட், கனரக தொழில்துறைகள் வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, இந்தியாவுக்கான தர குறியீட்டை ‘நிலையான’ என்பதில் இருந்து ‘எதிர்மறை’ என மாற்றியுள்ளது. ஆனால், இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, பொருளாதார அடிப்படை வலுவாகவே உள்ளது என கூறியுள்ளது.

Related Stories: