60,000 பிஎஸ்என்எல் ஊழியர்கள் விஆர்எஸ்

புதுடெல்லி: விருப்ப ஓய்வு திட்டத்தில் (விஆர்எஸ்) 60,000க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர்.மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் நஷ்டத்தால் தள்ளாடுகின்றன. சம்பளச்சுமையை குறைக்கும் வகையில் விஆர்எஸ் திட்டத்தையும் கடந்த 4ம் தேதி அறிவித்தது. இதை ஏற்பவர்களுக்கு ஆண்டுக்கு 35 நாள் சம்பளம் என பணியாற்றிய மொத்த ஆண்டுகளுக்கு கணக்கிட்டு கருணைத்தொகை வழங்கப்படும். ஓய்வு வயது வரை ஆண்டுக்கு 25 நாள் சம்பளம் வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். இதுபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி அன்று 50 வயது பூர்த்தியடையும் ஊழியர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். இதற்கு ஊழியர்களிடையே அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 57,000க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள், 3,500க்கும் மேற்பட்ட எம்டிஎன்எல் ஊழியர்கள் விஆர்எஸ் கோரி விண்ணப்பித்துள்ளதாக தொலைத்தொடர்பு செயலாளர் அன்சு பிரகாஷ் கூறியுள்ளார்.

Related Stories: