நம்பர் 1 பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்று ஆஸ்திரேலியா அசத்தல்

பெர்த்: பாகிஸ்தான் அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீசியது. ஸ்டார்க், அபாட், ரிச்சர்ட்சன் வேகக் கூட்டணியை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது. இப்திகார் அகமது 45 ரன் (37 பந்து, 6 பவுண்டரி), இமாம் உல் ஹக் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆமிர் 9, ஹஸ்னைன் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Advertising
Advertising

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 3, ஸ்டார்க், அபாட் தலா 2, ஏகார் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி. அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தனர். ஆஸி. அணி 11.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 109 ரன் எடுத்து அபாரமாக வென்றது. வார்னர் 48 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), பிஞ்ச் 52 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), பிஞ்ச் 52 ரன்னுடன் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. ஷான் அபாட் ஆட்ட நாயகன் விருதும், ஸ்டீவன் ஸ்மித் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். ஐசிசி டி20 தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடத்திலும் (8,149 புள்ளி), ஆஸ்திரேலியா (6,664 புள்ளி) 2வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: