×

அகில இந்திய ரயில்வே வாலிபால் அகில இந்திய ரயில்வே வாலிபால்

சென்னை: தேசிய ரயில்வே வாலிபால் தொடரின் லீக் ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி 3-0 என்ற நேர் செட்களில் ரயில்வே பாதுகாப்பு படை அணியை வீழ்த்தியது. ஐசிஎப் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கிய இந்த தொடரில்  மொத்தம் 21 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் போட்டியில்  வாரணாசி  டீசல் லோகோ பணிமனை - தென்கிழக்கு மத்திய ரயில்வே அணிகள் மோதின. இதில் 3-0  என்ற நேர் செட்களில் டீசல் லோகோ பணிமனை  அணி வெற்றி பெற்றது.

கவுகாத்தி வடக்கு பிராந்திய ரயில்வே 3-1 என்ற செட் கணக்கில் மும்பை மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. அடுத்து நடைபெற்ற போட்டியில் தெற்கு ரயில்வே- ரயில்வே பாதுகாப்பு படை அணிகள் களம் கண்டன.  இதில் 3-0 என்ற  நேர் செட்களில்  தெற்கு  ரயில்வே அணி  எளிதாக வென்றது.  வடக்கு ரயில்வே - கிழக்கு மத்திய ரயில்வே மோதிய போட்டியில் வடக்கு  ரயில்வே 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. தென் மத்திய  ரயில்வே அணி 3-0 என்ற செட் கணக்கில்  தென் மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.


Tags : India Railway Volleyball All India Railway Volleyball , All Indian Railway ,Volleyball, All India Railway Volleyball
× RELATED சில்லி பாயின்ட்...