×

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எதிரொலி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை

சென்னை: அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வருவதையொட்டி முதல்வர் எடப்பாடி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.  அயோத்தி தீர்ப்பு எந்த நேரமும் வழங்கப்படலாம் என்ற சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை பெருநகர் காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 அப்போது, அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு வரும்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.  தலைமை செயலக வளாகத்திற்குள் தனியார்களின் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்களின் வாகனங்கள் மட்டுமே தலைமை செயலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

Tags : police officers ,chief minister ,Ayodhya , Ayodhya case, top police officers, CM
× RELATED தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்...