×

மின்சாரம் பாய்ந்து லிப்ட் ஆபரேட்டர் பலி

ஆலந்தூர்: ஆதம்பாக்கம், ஏஜிஎஸ் காலனி, 6வது விரிவாக்க பகுதியில் புதிதாக ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் வெள்ளையன் என்பவர் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் நித்யானந்தம் (32) என்பவர் லிப்ட் அமைக்கும் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இவருக்கு உதவி ஆபரேட்டராக, மூவரசன்பட்டு பிரதான சாலையை சேர்ந்த நித்யன் (20) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் லிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.Tags : lift operator , Electricity flows ,e lift operator kills
× RELATED மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி