சென்னை மாநகராட்சியின் சைக்கிள் ஷேரிங் உள்ளிட்ட 4 திட்டங்களுக்கு விருது

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பொதுமக்களின் குறை தீர்க்கும் “நம்ம சென்னை” செயலி துவக்கிவைக்கப்பட்டது. இந்த செயலியில் பொதுமக்கள் எந்த நேரத்திலும் பிறப்பு, இறப்பு, தொழில் வரி, சொத்து வரி மற்றும் வர்த்தக உரிமம் சான்றிதழ்கள், ரசீதுகளை பதிவிறக்கம் செய்யமுடியும். இதேபோன்று 50 இடங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டம், 28 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம், 662 கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு கவர்னன்ஸ் நவ் என்ற நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. அதன்படி மின்னணு மாற்றத்திற்கான சிறந்த அம்சங்களை திட்டங்களில் செயல்படுத்திய காரணத்திற்காக “சமூகத்தில் நிலையான நகரங்களுக்கான மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான விருது” சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி பணிகள் துறை துணை ஆணையரும், சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவன மேலாண்மை இயக்குநருமான கோவிந்தராவ், மின்சார துறையின் தலைமைப் பொறியாளர் துரைசாமி, மழைநீர் வடிகால் துறை செயற்பொறியாளர் சரவணமூர்த்தி, சிறப்புத் திட்டங்கள் துறை உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

Related Stories:

>