×

டிசம்பர் 8, 29ல் திருநெல்வேலி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

சென்னை : தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு ரயில் (82604) கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இதேபோல், வரும் 12 மற்றும் 19ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, சிவமுகா டவுனுக்கு சிறப்பு ரயில் (06222) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.55 மணிக்கு சென்றடையும். இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tirunelveli ,Tambaram , Special train , Tirunelveli and Tambaram,December 8, 29
× RELATED நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே மெமு...