பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்க ‘தோழி’ என்ற புதிய திட்டம் மாநகர காவல்துறையில் அறிமுகம்

சென்னை: பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் மகளிர் காவலர்கள் கையில்தான் உள்ளது என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ‘தோழி’ திட்டத்தை தொடங்கி வைத்து அறிவுரை வழங்கினார். பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு காவல்துறையின் ஆலோசனைகள் வழங்கி நல்லமுறையில் மனநலம் பேணுவதற்கும் மனதளவில் திடப்படுத்தவும் ‘தோழி’ என்ற புதிய திட்டம் சென்னை மாநகர காவல் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடக்க விழா வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ேநற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, மனநல மருத்துவர் ஷாலினி மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர் ஆண்ட்ரூ சேசுராஜ் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ‘தோழி’ திட்டத்தை தொடங்கி வைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது: ‘தோழி’ திட்டம் போக்சோ சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. பாலியல் குற்றங்கள் நடந்த பின் குழந்தைகள் பெண்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்தில் இருந்து இரண்டு பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார்கள். மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கையும் மகளிர் காவலர்கள் கையில் உள்ளது ‘தோழி’ திட்டத்தை மகளிர் காவலர்கள் சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

5 மாதத்தில் மட்டும் 103 பாலியல் வழக்கு பதிவு

சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று தமிழக முதல்வர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் பல நிகழ்ச்சிகளில் கூறி வருகின்றனர். ஆனால் ‘சென்னை மாநகரம்’ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருவதையே தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. அதேநேரம், ‘தோழி’ என்ற புதிய திட்டம் தொடக்க விழாவிற்கு பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி நிருபர்களிடம் பேசினார்.

அப்போது, ‘இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர்கள் எளிமையாக அணுகுவதற்கும் காவல்துறையினர் அவர்கள் சார்ந்த பாதிப்புகளை ரகசியமாக வைத்துக் கொள்வதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கடந்த 2012ம் ஆண்டு முதல் கடந்த 2019 ஜூன் மாதம் வரை சென்னை மாநகர காவல் துறையில் 936 பாலியல் வழக்குகள் பதிவு ெசய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களை விசாரிக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு தனியாக தொடங்கப்பட்ட பிறகு, கடந்த ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை சென்னையில் 103 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

>