×

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : ஒருவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி அவ்வை நகர் 3வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த கஜேந்திரன் என்பவரின் மகன் பரமசிவம் (24) என்பவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திராவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கைது செய்யப்பட்ட பரமசிவத்தையும் அவர்களிடம்


Tags : home , 1 ton, ration rice seized at home, One person arrested
× RELATED 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்