சென்னை முழுவதும் 22 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் : கமிஷனர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் 22 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அண்ணா நினைவிட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த காசியப்பன் ராயபுரம் சட்டம் ஒழுங்குக்கும், ராயபுரம் சட்டம் ஒழுங்கில் இருந்த கருணாகரன் அண்ணா நினைவிட காவல் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த நடராஜ் ஆவடி டேங்க் தொழிற்சாலை காவல் நிலையத்திற்கும், ஆவடி டேங்க் தொழிற்சாலை காவல் நிலையத்தில் இருந்த ஜெய்கிருஷ்ணன் பட்டாபிராம் சட்டம் ஒழுங்குக்கும், பட்டாபிராம் சட்டம் ஒழுங்கில் இருந்த விஜயலட்சுமி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் அண்ணாநகர் குற்றப்பிரிவுக்கும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த மணிமேகலை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலையரசன் கானத்தூர் குற்றப்பிரிவுக்கும், கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இருந்த சங்கர் வடக்கு கடற்கரை குற்றப்பிரிவுக்கும், காசிமேடு சட்டம் ஒழுங்கில் இருந்த சிதம்பரம் முருகேசன் அம்பத்தூர் சட்டம் ஒழுங்குக்கும், குன்றத்தூர் காவல் நிலையத்தில் இருந்த சார்லஸ் மீன்பிடி துறைமுகம் சட்டம் ஒழுங்குக்கும், டி.பி.சத்திரம் குற்றப்பிரிவில் இருந்த சாந்திதேவி வில்லிவாக்கம் குற்றப்பிரிவுக்கும், ராயப்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த கண்ணன் குன்றத்தூர் காவல் நிலையத்திற்கும், அபிராமபுரம் குற்றப்பிரிவில் இருந்த சண்முகசுந்தரம் ராயப்ேபட்டை சட்டம் ஒழுங்குக்கும், மீன்பிடி துறைமுகம் சட்டம் ஒழுங்கில் இருந்த கவிதா கொத்தவால்சாவடி குற்றப்பிரிவுக்கும், நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்த காமாட்சி அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,

அம்பத்தூர் சட்டம் ஒழுங்கில் இருந்த பொற்கொடி கொரட்டூர் சட்டம் ஒழுங்குக்கும், கொரட்டூர் சட்டம் ஒழுங்கில் இருந்த விஜயகுமார் காசிமேடு சட்டம் ஒழுங்குக்கும், ராயப்பேட்டை குற்றப்பிரிவில் இருந்த ஜெகநாதன் நவீன கட்டுப்பாட்டு அறைக்கும், உயர் நீதிமன்ற சட்டம் ஒழுங்கில் இருந்த பார்வதி மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரபா உயர் நீதிமன்ற சட்டம் ஒழுங்குக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>