நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி அறிக்கை

சென்னை: அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி யின் பொதுச் செயலாளர் தமிமுன்  அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தீர்ப்பு என்பது  நம்பிக்கைகளின்  அடிப்படையில் அமைய கூடாது. மாறாக ஆவணங்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். எல்லாவற்றையும் விட நாட்டு மக்களின் ஒற்றுமையும், பொது அமைதியும் முக்கியமானது. கடந்த காலங்களில் இப்பிரச்னைகளால் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பறி போயிருக்கின்றன. இனி இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது.  தீர்ப்புக்கு பின் அது குறித்த வெற்றி ஆரவாரங்கள் அல்லது கண்டன போராட்டங்கள் ஆகியன நாட்டின் அமைதியை குலைத்து விடும். எனவே சகல தரப்பும்  உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: