போலீஸ் உடற்தகுதி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: சூழ்நிலையை கருத்தில் கொண்டு, போலீஸ் உடற்தகுதி தேவுர்களை ஒத்திவைப்பதாக தமிழக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8,826 பணியிடங்களுக்கும் இது தவிர 62 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 8,888 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிட்டது. இதற்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் நடந்தது.

Advertising
Advertising

இதனைதொடர்ந்து செப்டம்பர் 26ம் தேதி முடிவுகள் வெளியானது. இதில் 46,700 பேர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஐஜிக்கள் தலைமையில் உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று வருகிறது.   இந்தநிலையில், தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை உடல்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியன ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

Related Stories: