மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தகவல்

சென்னை:  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் நேற்று தமிழ் அகராதியியல் நாள் தொடக்க விழா நடந்தது. பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்ட 9000 தமிழ் சொற்கள் அடங்கிய குறுந்தகட்டினை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட அமைச்சர் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “மது கூடாது என்பதுதான் ஜெயலலிதா அரசின் கொள்கை. ஆனால், உடனடியாக மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் மதுக்கடைகளை 100 சதவீதம் மூடுவோம் என வாக்குறுதி கொடுத்தோம். நாங்கள் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட மாட்டோம். இதுவரை 2000 கடைகள் மூடப்பட்டுள்ளது. மற்ற கடைகளும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Advertising
Advertising

Related Stories: