குலுக்கலுக்கு 2 நிமிடத்துக்கு முன்பு வாங்கினார் கேரள அரசு லாட்டரியில் பெண்ணுக்கு 60 லட்சம் பரிசு

திருவனந்தபுரம்: ஆலப்புழா அருகே குலுக்கலுக்கு 2 நிமிடத்துக்கு முன்பு லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண்ணுக்கு 60 லட்சம் பரிசு விழுந்தது.

கேரள  மாநிலம் ஆலப்புழா  அருகே உள்ள தெக்கநரியாடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்.  இவரது மனைவி லேகா  (32). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். லேகா கடந்த இரு  வருடத்துக்கு முன்பு  ஆலப்புழா கலெக்டர் அலுவலகம் அருகில் லாட்டரி கடை  நடத்தி வந்தார்.  பிரகாஷ் ஒரு விபத்தில் படுகாயமடைந்ததால் லாட்டரி கடையை  மூடிவிட்டார்.  
Advertising
Advertising

இந்த நிலையில் கேரள அரசின் அக்‌ஷயா லாட்டரி  குலுக்கல் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு நடந்தது. இந்த லாட்டரிக்கு முதல்  பரிசு  ரூ.60 லட்சமாகும். குலுக்கல் தொடங்குவதற்கு 2  நிமிடத்துக்கு முன்பு ேலகா  அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் ஒரே எண் கொண்ட 12  லாட்டரி டிக்கெட்டுகளை  வாங்கினார்.  இதில் ஏஒய் 771712 என்ற சீட்டுக்கு முதல்  பரிசான 60  லட்சம் கிடைத்தது. இதே எண்ணை கொண்ட மேலும் 11 டிக்கெட்டுகளுக்கு  ஆறுதல்  பரிசாக தலா 8 ஆயிரமும் கிடைத்தது. குலுக்கல் நடப்பதற்கு 2 நிமிடத்துக்கு  முன்பு  வாங்கிய டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ₹60 லட்சம் கிடைத்தது  மகிழ்ச்சி அளிக்கிறது என்று லேகா கூறினார்.

Related Stories: