×

கடல் பகுதியில் மர்ம டிரோனை வீழ்த்திய ஈரான்

டெக்ரான்: ஈரான் தனது எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் சுற்றிய அடையாளம் தெரியாத ஆளில்லா குட்டி விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2015ல் வெளியேறியது. இதை தொடர்ந்து அந்த நாட்டின் மீது அமெரிக்க பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தங்கள் நாட்டு எல்லை பகுதியில் சுற்றிய அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை (டிரோன்) ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதற்கு ராணுவ ரீதியாக பதிலடி தர  முடிவு செய்த டிரம்ப், கடைசி நேரத்தில் தனது தாக்குதல் முடிவை மாற்றிக்கொண்டார். இந்த நிலையில், நேற்று ஈரான் மீண்டும் அடையாளம் தெரியாத டிரோன் ஒன்றை தனது கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தியது. ஆளில்லா அந்த குட்டி விமானம் எந்த நாட்டை சேர்ந்தது என தெரியவில்லை என ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஎஸ்என்ஏ தெரிவித்துள்ளது.

Tags : Iran ,sea , Iran, mysterious drone at sea
× RELATED ஏரியில் குதித்து பெண் தற்கொலை: ட்ரோன்...