×

புல்புல் நாளைகரை கடக்கும்

கொல்கத்தா: வங்கக் கடலில் உருவாகியுள்ள புல்புல் புயலானது மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் தெற்கே 600 கி.மீ் தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இது இன்று மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இது மேலும் வடகிழக்கே நகர்ந்து மேற்கு வங்கத்தின் சாகர்தீவு மற்றும் வங்கதேசத்தின் கேப்புபரா இடையே நாளை காலை கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

புயல் கரையை கடக்கும்போது அதி தீவிர புயலாக மாறும், மணிக்கு 155 கி.மீ. வேகத்துக்கு பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக கொல்கத்தா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, ஹூக்ளி, கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபோர் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Bulbul , Bulbul , cross tomorrow
× RELATED புல்புல்