பொய் கூறுவதை பாஜக நிறுத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மும்பை: ஆட்சியில் சமபங்கு என்பதை ஏற்கனவே பாஜக ஒத்துக்கொண்டுள்ளது என்று உத்தவ் தாக்கரே விளக்கமளித்துள்ளார். பொய் கூறுவதை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை நான் எப்போது விமர்ச்சித்தேன் என்று பாஜக விளக்கமளிக்கவும் கோரியுள்ளார்.

ராஜினாமா கடித்ததை வழங்கியபிறகு செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேசுவதற்கு மட்டும் நேரமுள்ளது. ஆனால் பாஜகவுடன் ஆலோசிக்க நேரமில்லை என சிவசேனாவை புகார் கூறினார். மேலும் கடந்த காலங்களில் பலமுறை சிவசேனா கட்சி தங்களை அவமானப்படுத்தி உள்ளதாக பட்னாவிஸ் குற்றம் சாட்டினார். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பற்றி சிவசேனா கட்சியினர் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். அதேபோல் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டு சிவசேனா கட்சிக்கு வழங்குவதாக ஒருபோதும் தாம் கூறவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் சமபங்கு என்பது குறித்து தனது முன்னிலையில் சிவசேனா எந்த ஆலோசனையும் நடத்தவிலை என்றும் எந்த உடன்படும் செய்யவில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆட்சி அமைப்பது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவருடன் பேச முடியவில்லை என பட்னாவிஸ் தெரிவித்துளளார்.

288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனிடையே கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் அரசியல் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

Related Stories: