×

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 330 புள்ளிகள், நிஃப்டி 103 புள்ளிகள் சரிவு

மும்பை: பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 330.13 புள்ளிகள் சரிந்து 40323.61 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 103.90 புள்ளிகள் சரிந்து 11908.15 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ பேங்க் 59.06, இண்டஸ்லேண்ட் பேங்க் 25.10, கோடக் மகேந்திரா 23.55, எஸ் பேங்க் 5.42, ஹெச்சிஎல் டெக் 1.73 புள்ளிகள் வரை உயர்ந்தது. டிசிஎஸ் 53.18, ரிலையன்ஸ் 39.88, ஐடிசி 39.86, இன்போசிஸ் 35.40, ஹெச்யுஎல் 33.21 புள்ளிகள் வரை சரிந்தது.

தேசிய பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ பேங்க் 13.78, இண்டஸ்லேண்ட் பேங்க் 4.71, கோடக் மகேந்திரா 3.04, எய்ச்சேர் மோட்டார்ஸ் 1.42, எஸ் பேங்க் 1.25 புள்ளிகள் வரை உயர்ந்தது. டிசிஎஸ் 12.20, ஐடிசி 9.00, ரிலையன்ஸ் 8.94, இன்போசிஸ் 8.46, ஹெச்யுஎல் 7.69 புள்ளிகள் வரை சரிந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சரிவு காணப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.23 குறைந்து ரூ.3,635க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.47.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Sensex ,Nifty , Stock, Sensex, Nifty
× RELATED பங்குசந்தைகளில் சென்செக்ஸ் 225...